August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம்

1 min read

Special food distribution for Ayyappa devotees going to Sabarimala

23.12.2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு காலை, மதியம், மாலை, என மூன்று வேளையும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அறக்கட்டளை சார்பாக ஐயப்ப பக்தர்களுக்கும் உடன் வரும் பொது மக்களுக்கும் தினசரி சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கற்குடி ஊராட்சி கட்டளை குடியிருப்பில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் அறக்கட்டளை மாநிலத் தலைவர் பிரபாகரன் ஜி மற்றும் அன்னதான கமிட்டியின் துணைத் தலைவர் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி கே பாண்டியன் ஆகியோர் தலைமையில் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் கடந்த 33 நாட்களாக தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது

34வது நாளான நேற்று ஐயப்ப சேவா சங்கத்தின்‌ மாநிலத் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையில்
காலையில் 1300 நபர்களுக்கு இட்லி பொங்கல், கேசரி
என்று சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது .

தினமும் மதியம் இரண்டு வகை கூட்டுடன் சாம்பார், ரசம், மோர், அப்பளம், வடை பாயாசத்துடன் கூடிய அறுசுவை உணவு 1500 முதல் 2000 நபர்களுக்கு வழங்கப்படுகிறது

தினமும் இரவு ஆயிரத்திற்கும் மேற்பட்டவருக்கு சப்பாத்தி, கிச்சடி போன்றவை வழங்கப்படுகிறது. மூன்று வேளையும் ஐயப்ப பக்தர்களுக்கு இருபதற்கும் மேற்பட்ட மாலை போட்ட ஐயப்பமார்கள் உணவு பறிமாறி சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தின அன்னதான கமிட்டி தலைவர் வேலுச்சாமி , மாநில இணை செயலாளர் புளியரை மாரியப்பன் தங்கராஜ்சாமி, கற்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பாண்டி மற்றும் அன்னதான கமிட்டி உறுப்பினர்களோடு கோவிந்தப்பேரி டி.கே. பாண்டியன் மேற்பார்வையில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

நாள்தோறும் செங்கோட்டை வழியாக சபரிமலை செல்லும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் இந்த அன்னதான கூடத்திற்கு வருகை தந்து அங்கு அன்புடன் பரிமாறப்படுகின்ற சிறப்பு அன்னதானத்தை உண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

மேலும் இந்த சிறப்பு அன்னதானத்தை முன் நின்று நடத்துகிற
சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *