ஆலங்குளம் அருகே நல்லூரில் பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி
1 min read
Tribute to Poornasandran in Nallur near Alankulam
23.12.2025
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்த பிரச்சனையில் தீக்குளித்த பூர்ண சந்திரனுக்கு ஆலங்குளம் அருகே உள்ள நல்லூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலையில் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதிக்காமல் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றவில்லை .
தமிழக அரசை கண்டித்து முருக பக்தர் பூர்ண சந்திரன் தன் மேல் தீபம் ஏற்றி உயிர்த் தியாகம் செய்தார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நல்லூர் பஞ்சாயத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு ஒன்றிய தலைவர் குமரகுருபரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் பண்டரிநாதன், பொதுச் செயலாளர் நாகராஜா, ஆன்மிகப் பிரிவு ஒன்றிய தலைவர் ராமசாமி, நவமணி, வைத்திலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.