June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

மாலியில் பயங்கரவாதிகள் பிடியில் கடையநல்லூர் நபர்கள்- மீட்க கோரி கலெக்டரிடம் மனு

1 min read

Kadayanallur people in the clutches of terrorists in Mali – Petition to the Collector

24/12/2025
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 பேர்களையும் பயங்கர வாதிகளிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்பதை வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அவர்களது உறவினர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

மாலியில் கடத்தப்பட்ட கடையநல்லுாரை சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேர், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், ஆயுதம் ஏந்திய ஜிகாதி பயங்கரவாத படைகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தொடர்ந்து சண்டை நடந்து வருவதால், பொதுமக்கள் பலர் தங்களது இருப்பிடங்களை விட்டு, இடம் பெயர்ந்து வருகின்றனர். மாலி யில் இந்தியர்கள் பலர் வேலைபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லுாரை சேர்ந்த இருவர் உட்பட ஐந்து பேர், மாலியின், மேற்கு பகுதியில் உள்ள கோப்ரி நகரத்தில், தனியார் மின்சார நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்களை கடந்த நவம்பர் 6ம் தேதி, அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.

இதனை தொடர்ந்து, தலைநகர் பமாகோவில் இருந்து அந்நிறுவனத்தின் இந்திய தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற் றப்பட்டதாகவும் கூறப்ப டுகிறது.

இந்நிலையில், கடத்தப்பட்ட 5 பேரில், இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த
பிரவீனா என்பவரின் கணவர் இசக்கிராஜா(வயது 36),
புதுக்குடி, கண்மணியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சுரேஷ்(வயது 26) என தெரிய வந்துள்ளது. இவர்களை மீட்கக் கோரி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இந்திய நூதரக அதிகாரிகளுக்கும் மனு அளித்தனர்.

இந்நிலையில்,கடத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, இருவரும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்னர். அதில் கடந்த நவம்பர் 6 ம் தேதி இரவு 8.38 மணிக்கு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில் தங்களை சிலர் கடத்திச் சென்று விட் டதாகவும், பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையையும் நிறுவனம் மேற்கொள்ள வில்லை. தங்களை விரைந்து மீட்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே உறவினர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த வீடியோவில் தெரிவித் துள்ளனர்.

தங்களை வேலைக்கு அழைத்து சென்ற தென்காசியை சேர்ந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.

இந்த வீடியோ இப்போது தென்காசி பகுதியில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து, மாலியில் சிக்கி தவிக்கும் இசக்கிராஜா, பிர வின் உட்பட ஐந்து பேரையும் மீட்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர், மற்றும் உறவினர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *