பாவூர்சத்திரம் விவசாயிக்கு இழப்பீடு- எஸ்.ஐ.யிடம் ரூ.1 லட்சம் வசூலிக்க ஆணை
1 min read
Compensation to Pavurchatram farmer – Order to collect Rs. 1 lakh from SI
24.12.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரி பகுதியில் நிலப்பிரச்னை விவகார வழக்கில் விவசாயி, மற்றும் அவரது உறவினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்கவும், அத்தொகையை பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் அப்போது பணிபுரிந்த எஸ்.ஐ.யிடம் வசூலிக்கவும் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட் டம், கல்லூரணி அருகே மலையராமபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவர் கடந்த 2023ம் ஆண்டு குத்தகை நிலத்தில் மல்லிகை பயிரிட்டார். அந்த நிலம் தொடர்பான பிரச்னையில் பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து கோவில் வரி பிரச்னையில் முருகேசனும், அவரது சகோதரர் மகன் அதே ஊரைச் சேர்ந்த. தங்கசெல்வனும் எதிர் தரப்பினரால் தாக்கப்பட்டனர். இதில் காயம் அடைந்த முருகேசன் தரப்பினர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதும் எதிர்தரப்பினர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, முருகேசன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இருதரப்பினரிடம் விசாரணை நடத்தினார். வழக்கில் மனித உரிமைகள் மீறல் நடைபெற்று உள்ளதால் முருகேசன், தங்க செல்வனுக்கு தமிழக அரசு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், அப்போதைய பாவூர்சத்திரம் எஸ்.ஐ., கோவிந்தராஜிடம் ரூபாய் 1 லட்சம் வசூலிக்கவும், அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார்.