August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம்

1 min read

Voter registration camp in Tenkasi district

30.12.2025
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேற்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும் தகுதியில்லாத வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அவர்களை கண்டறிந்து நீக்கவும் 19.12.2025 முதல் 08.012026 வரையிலான காலகட்டத்தில் ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம் என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

19:12 2025 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் (படிவம்-6) நீக்கம் செய்தல் (படிவம்-7) மற்றும் திருத்தம் செய்தல் (படிவம்.8) தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்தல் தொடர்பாக 03.012026 மற்றும் 04,012026 ஆகிய தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்கும் அனைத்து கட்சியினரும் தங்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *