June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

Electricity Board employees protest in Tenkasi

30.12.2025
தென்காசி மாவட்டம் தென்காசி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் மின்சாரச் சட்டதிருத்த மசோதா 2025 தாக்கல் செய்ய இருப்பதை கண்டித்தும் அனுமின் கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பட்ட முத்து தலைமை தாங்கினார் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் அயுப்கான் சிறப்புரை ஆற்றினார். தொமுச துணைச் செயலாளர் அப்துல் காதர், சம்மேளன துணைச் செயலாளர் தாஸ் விவசாய சங்க செங்கோட்டை தாலுகா செயலாளர் ராஜகோபால், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் தோழர் வேல் மயில் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். முடிவில் சங்கை முருகேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *