June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியரை-புனலூர் சாலையில் கனிமவள ராட்சத லாரிகளை கட்டுப்படுத்த கே.ரவிஅருணன் கோரிக்கை

1 min read

K. Ravi Arunan requests to control mineral giant trucks on the Puliyarai-Punalur road

3.1.2026
தென்காசி மாவட்டம் புளியரை புனலூர் சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணம் கனிமவள ராட்சஷ லாரிகள் தான் எனவே கனிமவள லாரிகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புளியரை புனலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது. மிக கனரக வாகனங்கள் அளவுக்கு மீறி கனிம வளங்களை அதிகளவில் ஏற்றி செல்வதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதற்கு முன்பு மலைவழிச்சாலையில் 10 சக்கர வாகனங்களுக்கு மேல் இயங்கக்கூடாது என்ற உத்தரவு இருக்கும்போது இவ்வாறு போக்குவரத்து தடை ஏற்படுவது இல்லை. அந்த உத்தரவிற்கு சிலர் தடை வாங்கியதால் தான் இந்த நிலை ஏற்படுகின்றது. ஆகவே மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருக்கின்ற போக்குவரத்து நெரிசலை போக்க அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வாங்கிய தடையை நீக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *