June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி மறியல்: 401 பேர் கைது

1 min read

Protest demanding fulfillment of election promise 313 in Nellai: 401 people arrested

6/1/2026
தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி.யு. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திருநெல்வேலியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின்போது, தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில், வாக்குறுதி எண் 313-ல் கூறியபடி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி நிரந்தரப்படுத்துவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். 1993-ல் பணியில் சேர்ந்த பணியாளருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும். குழந்தைகள் நலன் கருதி காலி பணியிடங்களை நிபந்தனையின்றி நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடந்த சாலை மறியல் போரட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. திருநெல்வேலி மாவட்ட தலைவர் முருகன் மறியல் போரட்டத்தை துவக்கி வைத்தார். அங்கன்வாடி சங்க மாவட்ட தலைவர் பிரேமா, மாநில செயற்குழு உறுப்பினர் மலைபகவதி, மாவட்ட பொருளாளர் இந்திரகலா, துணைத்தலைவர் பூபதி, ஓமணா, கல்யாணி, முனியம்மாள், இணைச்செயலாளர் சாந்தகுமாரி, வசந்தாபாய், ராமலெட்சுமி, லலிதா, தங்கம்(எ)விஜயகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களை மூடிவிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் உட்பட 401 அங்கன்வாடி பெண் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர்.

6.1.2025
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்திய நீதிபதிகள், கடந்த வாரம் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு, சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பளித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கள் வரவேற்று அறிக்கை வெளியிட்டு வருகின்றன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த தீர்ப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:-
“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும் வருகின்றனர். இது தற்செயலான நிகழ்வு அல்ல.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை திட்டமிட்டு முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை தமிழக அரசு திட்டமிட்டு தடுத்தது. கார்த்திகை தீபம் அன்று மலையில் நடைபெற வேண்டிய கொண்டாட்டத்தையும், பாரம்பரியத்தையும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இதையடுத்து பக்தர்கள் நீதி கேட்டு நீதிமன்றம் சென்றனர்.

தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அங்குள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இது தமிழக அரசின் சனாதன தர்மத்திற்கு எதிரான பாரபட்ச தன்மையையும், இந்துக்களுக்கு எதிரான மனநிலையும் தெளிவாக வெளிப்படுத்தியது.

குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் இந்து மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வு வெளிப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்துக்களுக்கு அங்கு தீபமேற்றும் உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுத்துள்ளது. தமிழக மக்களால் கொண்டாடப்பட வேண்டிய ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் அரசியல் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் அதனை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”
இவ்வாறு தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *