June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 37வது சாலை பாதுகாப்பு மாதம்

1 min read

37th Road Safety Month in Tenkasi

8.1.2026
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 37 வது சாலை பாதுகாப்பு மாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன் தலைமை தாங்கினார் , மோட்டார் வாகன ஆய்வாளர் ராசசேகர் முன்னிலை வகித்தார்.தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் வீரர்கள் கலந்து கொண்டு ஓட்டுனர் உரிமம் பெற வந்த பொது மக்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு , மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹெல்மெட் அணிதல் , காரில் டினவர் சீட் பெல்ட் அணிதல் அவசியம் குறித்தும் இதனால் விபத்து இல்லாமல் சாலையை பயன்படுத்துவது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராச சேகர் விளக்க உரை அளித்தார்.

தீ தடுப்பு முறை செயல் விளக்கம் தென்காசி தீயணைப்பு அலுவலர் பொறுப்பு ஜெயபிரகாஷ் பாபு அவர்கள் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ஜெயரத்தினகுமார், மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆர்பர்ட், சுந்தர் , ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு தீ தடுப்பு முறைகள் செயல் விளக்கம் செய்து காட்டினர்கள் . வருகை புரிந்த ஓட்டுநர்கள் அனைவருக்கும் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது..

இந்த நிகழ்ச்சியில் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலக சரக அனைத்து ஓட்டுநர் பயிர்ச்சிப்பள்ளி உரிமையாளர்கள் மற்றும் பயிர்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *