August 23, 2026

Seithi Saral

Tamil News Channel

சுந்தரபாண்டியபுரம் அருகே நாய்களை வைத்து வேட்டையாடிய 4 பேர் கைது

1 min read

4 people arrested for hunting with dogs near Sundarapandiyapuram

8.1.2026
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே தோட்டத்தில் நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயற்சித்த 4 நபர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட நபர்களை தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது பிடிபட்ட நபர்களிடம் மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் விசாரணை நடத்திய போது தங்களின் தவறை ஒப்புக்கொண்டதால் மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், அவர்களுக்கு ரூ.1,10,000 இணக்க கட்டணம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.

அப்போது அவர் கூறியதாவது:- வன விலங்குகளை வேட்டையாடுவது வனத்துறை சட்டப்படி மிகவும் கண்டிக்கத்தக்க செயல் ஆகும்.எனவே யாராக இருந்தாலும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது . இனியும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *