கூடலூரில் ராகுல் பங்கேற்ற பொங்கல் விழா- மாணவர்களுடன் உரையாடல்
1 min read
Rahul Gandhi interacts with students in pouring rain in Gudalur
13.1.2026
தமிழர் திருநாளான தை முதல்நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (15ம் தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். கர்நாடகாவில் இருந்து ஹெலிகப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு ராகுல் காந்தி வந்தார்.
மாலையில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் ராகுல் காந்தி உரையாற்றினார். பின்னர், பள்ளி மாணவ, மாணவியருடன் ராகுல் காந்தி உரையாடினார்.
நிகழ்ச்சி நடைபெறும் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனாலும், கொட்டும் மழையில் நனைந்தபடி ராகுல் காந்தி மாணவ, மாணவியருடன் உரையாடி வருகிறார். மாணவ, மாணவியர் கேட்கும் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார்.
பள்ளி மாணவ, மாணவியருடன் உரையாடியப்பின்னர் பள்ளிக்கு அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்