June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தாமரை வடிவிலான புதிய “பிரிக்ஸ்” லோகோவை வெளியிட்ட இந்தியா

1 min read

India unveils new lotus-shaped “BRICS” logo

13.1.2026
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது “பிரிக்ஸ்” (BRICS) அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.

கடந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 2026ம் ஆண்டின் “பிரிக்ஸ்” அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்தியா, புதிய லோகோ மற்றும் பிரத்தியேக இணையதளத்தை அறிமுகம் செய்தது.

தாமரை வடிவிலான இந்த லோகோ இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், 2016ல் வெளியிடப்பட்ட பழைய லோகோவை போலவே புதிய லோகோ அச்சு பிசகாமல் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *