June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

வடக்கிழக் பருவமழை விடைபெற்றது

1 min read

The northeast monsoon has departed.

19.1.2026
தமிழகத்தில் 2025ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை வருமாறு:-
வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 22ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 23ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அக்டோபர் 16ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *