தென்காசி குடியரசு தின விழாவில் நலத்திட்ட உதவிகள்-ஆட்சியர் வழங்கினார்
1 min read
The ruler distributed welfare assistance at the Tenkasi Republic Day celebrations
26.1.2026
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டம். தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.மாதவன், முன்னிலையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்ட காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூனினை வானில் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 66 காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 319 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தென்காசி மாவட்ட குறள்வார விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற 14 பேருக்கு ரூ.48,000 மதிப்பிலான பரிசுத்தொகையினையும், குறள்வார விழா திருக்குறள் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 3 பேருக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசுத்தொகையினையும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மாணவிகள் விடுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த 4 விடுதிக்காப்பாளர்களுக்கு சிறந்த காப்பாளர் விருது மற்றும் ரூ.18,000 மதிப்பிலான பரிசுத்தொகையினையும். ஒருவருக்கு சிறப்பு நற்சான்றினையும், வழங்கினார்.
தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியடையச் செய்த 5 ஆசிரியர்களுக்கு விருது மற்றும் நற்சான்றுகளையும், ஊரகவளர்ச்சித்துறையின் சார்பில் கீழவெள்ளகால் கிராம ஊராட்சி மற்றும் கொடிக்குறிச்சி கிராம ஊராட்சி என 2 கிராமத்திற்கு மாவட்ட அளவிலான முன்மாதிரி கிராமத்திற்கான விருது மற்றும் 15.00,000 மதிப்பிலான பரிசுத்தொகை யினையும், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ஈப்பு ஓட்டுநர் பணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தின்றி மாசற்ற நிலையில் பணிபுரிந்த ஒருவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் நற்சான்று என மொத்தம் 30 பேருக்கு 15,76.000பரிசுத்தொகையினை
மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் (2025.2026) இன் கீழ் பயனாளி ஒருவருக்கு நீர்சேமிப்பு கட்டமைப்பு அமைப்பதற்காக ரூ.75,000 உதவித்தொகைக் கான காசோலையினையும், ஒரு பயனாளிக்கு குறைந்த விலை வெங்காய சேமிப்புக்கூடம் அமைப்பதற்காக உதவித்தொகை ரூ. 100,000 க்கான காசோலை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு தலா ரூ.105,000 வீதம் ரூ.315,000 மதிப்பிலான பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளையும், தாட்கோ அலுவலகம் மூலம் 01 பயனாளிக்கு விபத்து உதவித்தொகை ரூ.100,000 க்கான காசோலையினையும், ஒரு பயனாளிக்கு முதியோர் உதவித்தொகை ரூ.1000க்கான காசோலையினையும். ஒரு பயனாளிக்கு கல்வி உதவித்தொகை ரூ.1500 க்கான காசோலையினையும் ஒரு பயனாளிக்கு திருமண உதவித்தொகை ரூ.5000க்கான காசோலையினையும், ஒரு பயனாளிக்கு இயற்கை மரண உதவித்தொகை ரூ.25,000க்கான காசோலையினையும்,
தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு காயர் பித் அமைப்பதற்காக ரூ.4930,300 கடனுதவிக்கான காசோலையினையும், ஒரு பயனாளிக்கு உடற்பயிற்சி மையம் அமைப்பதற்காக ரூ.10,58,000 கடனுதவிக்கான காசோலையினையும் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.66,10,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் அகரக்கட்டு புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி அரசு மகளில் மேல்நிலைப்பள்ளி, ஜவஹர் சிறுவர் மன்றம். வேல்ஸ் வித்யாலயா செகண்டரி பள்ளி, சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வெய்க்காலிப்பட்டி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமதி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 1071 மாணவ, மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், பரிசுகளை வழங்கினார்.
இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினார் எஸ்.பழனிநாடார், மாவட்ட வன அலுவலர் முனைவர் ராராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபா சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஆ.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டாக்டர் சுப்புலெட்சுமி தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம் மு.ஷேக் அப்துல்லா மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.