June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் புலன் உணர்வு பூங்கா திறப்பு விழா

1 min read
Inauguration ceremony of the sensory park of Ayikudi Amar Seva Sangam
29.1.2026
தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் ஆதரவோடு அமைக்கப்பட்ட புலன் உணர்வு பூங்காவினை ஆஸ்திரேலியா துணை தூதரகத்தின் தூதர் ஹேமருன் நோபல் திறந்து வைத்தார் .

அறிவுசார் மற்றும் வளர்ச்சி தாமத குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் தொழிற்சார் வாய்ப்பு களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த புலன் உணர்வு பூங்கா ஆய்க்குடி அமர்சேவா சங்கத்திற்கு சொந்தமான அமர் அப்துல் கலாம் மறுவாழ்வு தோட்டத்தில் திறக்கப்பட்டது.

இந்த பூங்காவை சென்னையில் உள்ள ஆஸ்திரேலியா துணை தூதரகத்தின் தூதர் ஹேமருன் நோபல் திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் அமர்சேவா சங்கத்தின் கோட்பாடுகள் ஆஸ்திரேலியா நாட்டின் கோட்பாட்டுகளுடன் ஒத்துப்போவது போல் அமைந்துள்ளது. கல்வி மற்றும் பயிற்சி என்பது நம் இருவரின் குறிக்கோள் என்று கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே‌.கமல் கிஷோர் பேசும்போது அமர் சேவா சங்கத்தின் அயராத உழைப்பு மிகச் சிறந்தது அதிலும் புலன் உணர்வு பூங்கா மறு வாழ்வின் ஒரு மைல் கல் இப்படிப்பட்ட ஒரு விழாவில் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை சேர்ந்த சம்ருதி அறக்கட்டளை யின் தலைவர்சி.ஏ.மகாதேவன் கலந்து கொண்டார். மேலும்
முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் டி எஸ் கிருஷ்ண மூர்த்தி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் சிபிஐ டைரக்டர் டி.ஆர். கார்த்தி கேயன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் முருகையா, சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் பட்டம்மாள், ராமன், டிவி சுப்பிரமணியன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இணைத் தலைவரும் செயலருமான எஸ். சங்கரராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் தலைவருமான பத்மஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரையற்றினார். மறுவாழ்வுத் துறை தலைவர் ராமசுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Inauguration ceremony of the sensory park of Ayikudi Amar Seva Sangam
Inauguration ceremony of the sensory park of Ayikudi Amar Seva Sangam

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *