June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி பகுதிகளில் நில அதிர்வு

1 min read


Earthquake tremors felt in Tenkasi, Srivilliputhur, Sivakasi, Sattur areas

30.1.1026
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைத்தனர். அந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3-ஆக பதிவாகியுள்ள நிலையில் ஸ்ரீவில் விபுத்தூர்,சிவகாசி, சாத்தூர் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

தென்காசி மாவட்டம் திரு வேங்கடம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 9.10 மணி அள வில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் நின் றனர்

திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனி, மகாதேவர்பட்டி, கலிங்கப்பட்டி, எஸ்.பி.எம். தெரு, மேலமரத்தோணி பகு தியில் உள்ள மேலூர், கீழூர். சிவகாசியை சுற்றியுள்ள நார ணாபுரம். அனுப்பன்குளம். சித்துராஜபுரம், ரிசர்வ்லைன், திருத்தங்கள் பகுதிகளிலும் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் சிலரின் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திடீரென கீழே விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இரவு சுமார் 10.30 மணி வரை வீட்டுக்குள் செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர்.

இதுகுறித்து எஸ்.பி.எம் தெருவை சேர்ந்த ராஜ்குமார்
கூறுகையில் “நான் இரவு சுமார் 8.30 மணிக்கே நில
அதிர்வை உணர்ந்தேன் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி
னேன் ஆனால் யாரும் நம்பவில்லை. இந்த நிலையில்
மீண்டும் 9 மணிக்குமேல் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அனைவரும் அவறியடித்து வெளியே ஓடி வந்தோம்” என்றார்.

கலிங்கப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த முத்துலட்சுமி கூறுகையில், “நான் இரவு சமையல், செய்து கொண்டிருந்த போது திடீரென சமையல் அறையின் மேல் வைக் கப்பட்டிருந்த பாத்திரங்கள் குலுங்கின. சில பொருட்கள் கீழே விழுந்தன உடனே நான் அனைத்தையும் அங்கேயே போட்டுவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன்” என பீதியு டன் கூறினார்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர். ராஜபாளையம், சாத்தூர், தாயில் பட்டி, ஆலங்குளம், ஏழாயிரம் பண்ணை, கிருஷ்ணனகோவில், நூர்சாகிபரம், வன்னியம்பட்டி குன்னூர், வத்திராயிருப்பு, நத்தம்பட்டி போன்ற பகுதிகளிலும் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3-ஆக பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சாத்தூர் அருகே ரெங்கப்ப நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் நில அதிர்வால் விரிசல் விழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *