June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.34,000 ஆயிரம் கோடி மதிப்பிலான 15 தொழில் முதலீடு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

1 min read

Tamil Nadu Cabinet approves 15 industrial investment projects worth Rs. 34,000 crore

5.2.2026
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

இன்றைய அமைச்சரவையில், ஏறத்தாழ 15 முதலீட்டு திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஒட்டுமொத்தமாக 34,237.39 கோடி ரூபாய்க்கான முதலீடு, 55,096 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய ஒரு அற்புதமான பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது நமது அமைச்சரவை.

இத்திட்டங்கள் மாநிலத்தின் பரவலான வளர்ச்சிக்கு உறுதி செய்யும் விதமாகவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன.

இதில் மிக முக்கியமான ஒரு திட்டம் வருகின்ற 13-ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளிவரும். 12-ஆம் தேதி உங்களுக்கு நன்றாக தெரியும். கன்வெர்ஷன் கான்க்ளேவ். இதுவரைக்கும் எந்த அரசாங்கமும் நடத்தாத ஒரு கன்வெர்ஷன் கான்க்ளேவ் நடத்த இருக்கிறோம். அன்றும் பல அறிவிப்புகள் வரவிருக்கின்றன.

குறிப்பாக, இதில் கெயின்ஸ் சர்க்யூட் லிமிடெட் என்னும் மின்னணுவியல் நிறுவனம், அதாவது பிரிண்டட் சர்க்யூட் போர்ட்ஸ், பிசிபிஸ், கேமரா மாடியூல்ஸ், லேமினேட்ஸ் இதையெல்லாம் செய்கின்ற கேமரா மாடியூல்ஸ் எல்லாம் இப்போது மிகவும் முக்கியமான தேவை மேம்பட்ட உற்பத்தி.

அடுத்து, ஜான்சன் எலெக்ட்ரிக் – வாகன மின்னணு உப பாகங்கள், ஆக்சுவேட்டர்ஸ், பிஎல்டிசி மோட்டார்ஸ், பவர் கூலிங் மோட்டார்ஸ் இதையெல்லாம் உற்பத்தி செய்கின்ற ஒரு நிறுவனம். எவர்வேன் கோத்தாரி ஃபுட்வேர் – இவர்கள் ஏறத்தாழ 25,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளார்கள். அடுத்ததாக, தமிழ்நாட்டிற்கு அதிதாஸ் பிராண்டை கொண்டு வர இருக்கிறோம்.

சென்னை ராதா இன்ஜினியரிங் இதுவும் மிகவும் முக்கியமான ஒரு இன்வெஸ்ட்மென்ட். ஷிப் பில்டிங்கில் உங்களுக்கே நன்றாக தெரியும். ப்ளூ எக்கனாமி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்கவேண்டும். தமிழ்நாட்டின் முழுமையான கோர்ஸ் நல்லபடியாக உபயோகப்படுத்த வேண்டும். அங்கே இருக்கின்ற நம்முடைய மீனவ நண்பர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஷிப் பில்டிங்கில் ஒரு பெரிய முன்னெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் நம்முடைய சென்னை ராதா இன்ஜினியரிங் ஷிப் ஹல்ஸ் செய்கின்ற ஒரு திட்டத்தில் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். அதற்கான ஒப்புதலும் இன்று கிடைத்திருக்கிறது.

அதேபோல, ஜோனஸ் என்ற ஒரு ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸில் (A&D) ரெடார், ரெடார் சிஸ்டம், ஆர்டிலரி ஷெல்ஸ், மிசைல் சப் சிஸ்டம்ஸ் இதையெல்லாம் செய்யப் போகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய ஒரு முன்னெடுப்பு. அதற்கான ஒப்புதலும் இன்று கிடைத்திருக்கிறது.

யசாக்கி இந்தியா பிரைவேட் லிமிடெட் – வாகன உபபாகங்கள், வயரிங் ஹார்னஸ், பஸ் ஸ்பார்ஸ் இதெல்லாம் செய்கின்ற நிறுவனம். அதையடுத்து, ஹுண்டாய் ஏற்கனவே இருக்கின்ற சில நிறுவனங்களுக்கான அந்த விரிவாக்கத்திற்காகவும் (expansions) இன்றைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜெட்சால் எனும் ஒரு நிறுவனம் அவர்கள் சோலார் செல் உற்பத்தி செய்வதற்கு தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார்கள்.

எனவே, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு, இந்தியாவின் நம்பர்-1 மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை தொடர்ந்து உறுதி செய்யும் இந்த வேலையை திராவிட நாயகன் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில், தொழில் துறையில், இன்று ஏறத்தாழ 34,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் 55,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வரவிருக்கின்றன. அதற்கான ஒப்புதல் இன்றைக்கு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதுதான் திராவிட நாயகன், திராவிட மாடல் அரசின் வேகம். இது தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *