June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

நாளை விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு

1 min read

Vijay-Sangeetha divorce case tomorrow.

14.6.2026
தமிழக முதல் அமைச்சரும் தவெக தலைவருமான விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்படி, சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு நாளை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இரு தரப்பிலும் நாளை வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் எனக்கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *