தமிழகத்தில் 23 மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம்.
1 min read
23 Public Relations Officers transferred in Tamil Nadu.
14.6.2026
தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,276 வழக்குகளில் ரூபாய் 5,02,83,418 க்கு தீர்வு காணப்பட்டது.
தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி. ராஜவேல் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் எஸ் .முருகவேல், முன்னிலை வகித்தார்.
தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ் எஸ். மனோஜ் குமார், தென்காசி முதன்மை சார்பு நீதிபதி ஏ. பிஸ்மிதா, தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி
சுதா ராணி , தென்காசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மாண்புமிகு ஜெ. ராஜேஷ்குமார் , தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி எஸ் . முத்துலெட்சுமி ஆகியோர் தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்தினர்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூபாய் 5,02,83,418 மதிப்புள்ள
1,276 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், சிவகிரி வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் வழக்காடிகள் பயன்பெறும் வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.