June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் பலி

1 min read

Protests in occupied Kashmir; 3 more killed in firing.

14.6.2026
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அரசியல் அடக்குமுறை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அகதிகளுக்கு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதாக பாக்., அறிவித்ததும், மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் இறங்கினர்.

அவாமி ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் எட்டு நாட்களாக ராவலாகோட் நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது பாக்., பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இது போன்ற தாக்குதல்களில், 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை தொழுகையின் போது போராட்டக்காரர்கள் மீது மீண்டும் பாதுகாப்பு படையினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. போராட்டத்தை திசைத்திருப்பவே பாதுகாப்பு படையினர் வன்முறையை துாண்டுவதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *