June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

கொடிக் கம்பங்களை அகற்றும் பணி – 13 மாவட்ட கலெக்டர்களுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

1 min read


Court orders action against 13 district collectors for removing flagpoles

9.2.2026
சிவகங்கையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதி மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றும் பணி குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *