தென்காசியில் பிப்.16, 17 ல் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்
1 min read
Cancer awareness and medical check-up camp in Tenkasi on Feb. 16th and 17th
14.2.2026
தென்காசி கேலட்டி ரெக்ரியேஷன் கிளப், தென்காசி மூத்தோர் மன்றம்,
மற்றும் ஹூண்டாய் ஹோப் ஃபார் கேன்சர் புரோஜக்ட்
கார்க்கினோஸ் ஹெல்த்கேர் (எ) லிமிடெட் இணைந்து நடத்தும் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம் 16.02.2026 திங்கள், 17.02.2026 செவ்வாய் இரண்டு நாட்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4-00 மணி வரை தென்காசி கேலட்டி ரெக்கியேஷன் கிளப் வளாகத்தில் நடைபெற உள்ளது
இந்த முகாமிற்கு தென்காசி கேலட்டி ரெக்கியேஷன் கிளப்
தலைவர் எம்.ஆர்.அழகராஜா தலைமை தாங்குகிறார்.
இந்த முகாமை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா ஜெஸ்வின் துவக்கி வைக்கிறார்.
தென்காசி தென்காசி பொதுமக்கள் அனைவரின் நன்மைக்காக உலக சுகாதார நிறுவனம் (WHO) வழிகாட்டுதலில் I.I.T. மெட்ராஸ் திட்டக்குழுவின் உதவியுடன் கார்க்கினோஸ் (KARKINOS) ஹெல்த்கேர் (பி) லிமிடெட்டின் தலைசிறந்த மருத்துவக் குழுவினர்கள் முகாமை நடத்த உள்ளர்கள்.
இந்த முகாமில் வாய் வழி புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும். 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள வருகை தருவோர் ஆதார் அட்டையின் நகலை அவசியம் காட்டவேண்டும்.
புற்றுநோய் வரும்முன் காத்து வராமல் நடுக்கல்ல ஆலோசனைகள் வழங்கப்படும். குடும்பத்தில் அல்லது சொந்த பந்தத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்திருந்தால் அனைவரும்
பரிசோதனை செய்வது நல்லது
ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சை பெற்று வருபவர்களும் கலந்துகொண்டு பயனடையனம் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த பரிசோதனை செய்து சிான சிகிச்சை மூலம் முழுமையாக குணமடைய வழிகாட்டப்படும்.
இந்த முகாமில் கலந்துகொள்ளும் பெண்கள், சிறப்பு பெண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். தேவையான பரிசோதனைகள் செய்துகொள்ளவும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் இல்லாத உலகை உருவாக்குவோம்.
இந்த முகாம் பற்றிய மேலும் விபரங்களை அறிந்து கொள்ள கார்கினோஸ் அமைப்பாளர்: 9443706923, அமைப்பாளர் மூத்தோர் மன்றம் 9865130746, அமைப்பாளர் தென்காசி கேலட்டி ரெக்கியேஷன் கிளப்
9865509345, 04633200040 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.