June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுணர்வு சுற்றுலா

1 min read

Out-of-state sightseeing tour for Tenkasi farmers

14.2.2026
தென்காசி வட்டார விவசாயிகளை நிலக்கடலை மற்றும் எள் பயிர்களில் தரத்தையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் 07.02.2025 முதல் 11.02.2026 முடிய ஐந்து நாட்கள் கண்டுணர்வு சுற்றுலாவாக ஹைதராபாத் தேசிய எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்

தென்காசி வட்டாரம் வேளாண்மைத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி அறிவுரையின்படி தென்காசி வட்டார விவசாயிகளை நிலக்கடலை மற்றும் எள் பயிர்களில் தரத்தையும் உற்பத்தி திறனையும் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் 07.02.2025 முதல் 11.02.2026 முடிய ஐந்து நாட்கள் கண்டுணர்வு சுற்றுலாவாக ஹைதராபாத் தேசிய எண்ணெய்வித்து ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பயிற்சியில் முனைவர் திரு.கணேசன் அவர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் எண்ணெய்வித்து ஆராய்சி நிலைய முனைவர் திரு.துரைமுருகன் அவர்கள் எள் மற்றும் சூரியகாந்தி பயிர்களில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள் மற்றும் வணீக ரீதியாக பயன்பாடு தேவை குறித்து விளக்கி கூறினார். பின்னர் முனைவர் திரு.இரத்தினகுமார் அவர்கள் நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய இரகங்கள் பற்றியும் கூறினார். மேலும் முனைவர். திருமதி.சங்கரிமீனா அவர்கள் விவசாயிகளை வயல்வெளிக்கு அழைத்து சென்று சூரியகாந்தி வயல் பார்வையிட்டு எண்ணெய்வித்து பயிர்களில் ஏற்படும் நூற்புழுக்கள் தாக்குதல் அறிகுறிகள் பற்றி எடுத்துக்கூறி அதனை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் முறைகளை எடுத்துக் கூறினார். இக்கண்டுணர்வு சுற்றுலாவிற்கு தேவையான ஏற்பாடு பணிகளை உதவி வேளாண்மை அலுவலர் பரமசிவன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் டாங்கை, திருமலைப் பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *