கடையம் வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு
1 min read
Bird census at Kadayam Forest Reserve
15.2.2026
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
கடையம் வனச்சரகத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை குறித்த கணக்கெடுப்பு மற்றும் அரியவகை பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தியின் உத்தரவின் பேரில் வனவர் மற்றும் வனத் துறையினர் மற்றும் பறவைகள் நல ஆர்வலர்கள் அடங்கிய குழு நவீன கருவிகளுடன் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த பறவைகள் கணக்கெடுப்பு விரைந்து முடிக்கப்பட்டு அரியவகை பறவைகளின் எண்ணிக்கை மற்றும் வெளிநாட்டு பறவைகளின் வருகை குறித்த அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படுமென கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தெரிவித்தார்.