June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

விஸ்வநாதபுரத்தில் பண்பொழி சார்பதிவாளர் அலுவலககட்டிடம் திறப்பு

1 min read

nauguration of the Registrar of Taxes office building in Viswanathapuram

15.2.2026
தென்காசி மாவட்டம் பண்பொழி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத் திற்கான புதிய கட்டிடம் பெரிய பிள்ளை வலசை ஊராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள நிலையில் அதனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக பதிவுத்துறையின் சார்பில் தென்காசி மாவட்டம், பெரிய பிள்ளை வலசை ஊராட்சி விஸ்வநாதபுரம் பகுதியில் ரூ.198 கோடி மதிப்பீட்டில் பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கான கட்டடத்தினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து

பெரிய பிள்ளை வலசை ஊராட்சி விஸ்வநாத் புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி துணை பதிவுத்துறை தலைவர் த.சுவாமிநாதன், உதவி பதிவுத்துறை தலைவர் மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) எம்.பால்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை பதிவுத்துறை தலைவர் பேசியதாவது:-

தென்காசி மாவட்டம். பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் விஸ்வநாதபுரம் பகுதியில் பதிவுத்துறை சார்பில் ரூ. 1.98 கோடி மதிப்பீட்டில் பண்பொழி சார் பதிவாளர் அலுவலகத்திற்கான கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பண்பொழி. பெரிய பிள்ளை வலசை, கணக்கப்பிள்ளை வலசை, தேன்பொத்தை வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.முத்திரைத்தாள் அறை, ஆவணப்பதிவ அறை, மின்னணு கணினி அறை, பதிவேடுகள் வைப்பறை. மாற்றுத்திறனாளி களுக்கான கழிப்பறை வசதி, போன்ற பல்வேறு வசதிகளுடன் இவ்வலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு துணை பதிவுத்துறை தலைவர் (திருநெல்வேலி) சுவாமிநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பண்பொழி பேரூராட்சி தலைவர் அ.இராஜராஜன், பண்பொழி சார்பதிவாளர் (பொ)திருஜான் டேவிட், பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் பொறியாளர் க.இ.வேலுச்சாமி, துணைத்தலைவர் நத்தடுஅம்மாள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *