June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

அரசு கொடுத்த ரூ.5 ஆயிரத்தை திருப்பி அனுப்பியவர்

1 min read

The person who returned the Rs. 5 thousand given by the government

5.2.2026
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்களுக்கு தேர்தல் காலத்தில் வரும் 3 மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ரூ.5 ஆயிரத்தை மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் இதுபற்றி ஒவ்வொரு விதமாக பேசுகின்றன. இதையே சமூகநல ஆர்வலர் ஒருவர் வேறு விதமாக அணுகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த சங்கரபாண்டி என்ற அந்த சமூக ஆர்வலர் தனது மனைவி பெயருக்கு அரசு அனுப்பி இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும் மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.

இதுபற்றி குறிப்பிட்டு உள்ள அவர் ‘கடன் சுமையுடன் இருக்கும் தமிழக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். தன் பணத்தை திருப்பி அனுப்பியதை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். இது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *