June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவகாமிபுரத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு

1 min read

Multipurpose building inaugurated in Sivagamipuram

16.2.2026
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் சிவகாமிபுரம் கிராமத்தில் ரூ 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம் திறக்கப்பட்டது.

கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாங்கட்டளை ஊராட்சிக்குட்பட்ட சிவகாமிபுரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 20 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பல்நோக்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பல்நோக்கு கட்டிடத்தை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர்
பி.ஹெச்.பி. மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இவ்விழாவில்
கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இரா. மகேஷ்மாயவன் ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் இரவி, மாவட்ட வலைத்தள பொறுப்பாளர் அந்தோணியம்மாள், அருள்செல்வன், செல்வராஜ், இணை செயலாளர் தங்கவேல், தங்ககாளி, காந்திநகர் ஜமாத் தலைவர் நூருல் அமீர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா, அன்பு, ஊராட்சி மன்ற உறுப்பினர் உமா என்ற மாரிச்செல்வி, அன்பு மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *