June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 755 மனுக்கள்

1 min read

Tenkasi: 755 petitions at the Public Grievance Redressal Day meeting

16.2.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (16.02.2026) மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 755 மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) நம்பிராயர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *