June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

வாசுதேவநல்லூர் முன்னாள் எம்எல்ஏ அ.மனோகரன் தவெக வில் இணைந்தார்

1 min read


Former Vasudevanallur MLA A. Manoharan joins Thaveka

16.2.2026
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ, தற்போது ஓபிஎஸ் அணியில் அமைப்புச் செயலாளராக இருந்து வரும் அ.மனோகரன் நேற்று தவெக தலைவர் விஜய் தலைமையில் தவெக வில் இணைந்தார். இவர் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமியின் உடன்பிறந்த சகோதரர் ஆவார்.

தமிழக வெற்றி கழகத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனர் நடிகர் விஜயை சந்தித்து கட்சியில் இணைந்து கொண்டார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்
அ.மனோகரன் அவர் கட்சியின் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும் ஓ பி எஸ் அணியின் அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழகவெற்றி கழகத்தில் தலைவர் நடிகர் விஜய்யின் இல்லத்தில் வைத்து கட்சியில் இணைந்தார்.

அவருக்கு கட்சியின் தலைவர் விஜய் சால்வைஅணிவித்து வரவேற்றார் முன்னாள் எம்எல்ஏ அ.மனோகரன் உடன் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் சவுக்கை வெங்கடேசன்,
ஓ .பி.எஸ். அணியின் பேரூர் செயலாளர்கள் வாசுதேவநல்லூர் சீமான் மணிகண்டன், சிவகிரி காசிராஜன், ஆகியோர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *