தமிழக அரசை கண்டித்து ஆலங்குளத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
1 min read
AIADMK protest in Alankulam condemning the Tamil Nadu government
17.2.2026
தமிழக அரசை கண்டித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலங்குளம் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஜி.இராஜேந்திரன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பாலகிருஷ்ணன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் NHM பாண்டியன் முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் முருகயாபாண்டியன்,விவசாய அணி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி, அமமுக ஒன்றியச் செயலாளர் முருகன், பாஜக செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் உள்ளிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
-ஜோசப், செய்தியாளர்.