கடையம்: அதிமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம்
1 min read
Kadayam: AIADMK Assembly Election Manifesto Pamphlet
17.2.2026
தென்காசி தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில்
கடையம் வடக்கு ஒன்றிய பகுதிகளில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோக்கித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 10 வாக்குறுதிகளை மக்களிடையே பரப்பும் பொருட்டு தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் கடையம் வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஐந்தாங்கட்டளை, லெட்சுமியூர், வடமலைபட்டி ஆகிய பகுதிகளில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஜி. இராஜேந்திரன் வீதிவீதியாக சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்து பரப்புரை மேற்கொண்டார்.
தென்காசி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி எஸ். கே. சண்முகசுந்தரம், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்த பரப்புரையில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜனதா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுப்பாராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் தமிழ்மணியன், துணைச் செயலாளர் ரஞ்சித்குமார், கிளை கழக செயலாளர்கள் ரவி, சரவணன், சந்திரா, குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.