June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு தகவல்

1 min read

Budget session to continue till 20th – Speaker Appavu informs

17.2.2026
2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கிடையே, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுநாள் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கமான பட்ஜெட்டாக இல்லாமல் இது ‘இடைக்கால பட்ஜெட்’ என்பதால், புதிய திட்டங்களை விட மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் முதன்மையாக இருக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *