தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பு
1 min read
Election announcements for 5 state assemblies, including Tamil Nadu, likely to be released in March
18.2.2026
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது. அதேபோல, கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல்களுக்கான அட்டவணை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில்தான் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளி இறுதித் தேர்வுகளை கருத்தில்கொண்டு தமிழ்நாடு உள் ளிட்ட மாநிலங்கள் வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.