அடுத்த ஏ.ஐ. மாநாடு ஜெனீவாவில் நடைபெறும்- சுவிட்சர்லாந்து அதிபர் அறிவிப்பு
1 min read
Next AI conference to be held in Geneva – Swiss President announces
20.2.2026
தலைநகர் டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி முதல் நடந்தது. இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, இலங்கை, நெதர்லாந்து, பின்லாந்து, குரோசியா, எஸ்டோனியா, சொ்பியா, சுலோவாகியா, மொரீஷியஸ், பூடான், கஜகஸ்தான், கிரீஸ், சீஷெல்ஸ், பொலிவியா, கயானா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் மற்றும் ஆல்பா பெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து அதிபர் கெய் பார்மலின் மாநாட்டில் பேசுகையில், அடுத்த ஆண்டு ஏ.ஐ. உச்சி மாநாடு ஜெனீவாவில் நடைபெறும் என அறிவித்தார்.