June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 81 மின்திருட்டுகள் கண்டுபிடிப்பு

1 min read

81 electricity thefts discovered in Tamil Nadu

23.2.2026
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மின் திருட்டுகள் குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”01.02.2026 முதல் 15.02.2026 வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி அமலாக்க கோட்ட பிரிவுக்கு உட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை மையம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் அமலாக்க உபகோட்டப் பிரிவுகளால் சென்னை மேற்கு, கோவை வடக்கு, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட கோட்ட அளவிலான அதிரடி கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 81 மின் திருட்டுகள் மற்றும் 12 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.96,43,659/-(ரூபாய் தொண்ணூற்று ஆறு இலட்சத்து நாற்பத்து மூன்று ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்தொன்பது மட்டும்) மின்நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.5,61,000/-(ரூபாய் ஐந்து லட்சத்து அறுபத்தி ஒன்றாயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின் திருட்டு தொடர்பான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591, கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443049456, மதுரை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443037508, திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவு9443329851என்றஎண்ணில்தெரிவிக்கலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *