கடையம் பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள்-ஆட்சியர் நேரில்ஆய்வு
1 min read
Development project works in rural areas – Ruler personally inspects
23.2.2026
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முதலியார் பட்டி, ஐந்தாங் கட்டளை, கடையம்பெரும்பத்து ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடையம் பெரும்பத்து ஊராட்சியில் 15 ஆவது நிதிக்கு மானியத்திட்டம் (2025-26) இன் கீழ் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலைப்பணிகளையும். முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.844 இலட்சம் மதிப்பீட்டில் சமையலறை கட்டடம் கட்டப்பட்டுள்ள பணிகளையும், கடையம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையினையும், ஐந்தாங் கட்டளை ஊராட்சியில் மாதிரி அங்கன்வாடி மையத்தில் விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி. ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பூச்செண்டு. ஒன்றிய பொறியாளர் சந்திரலேகா மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.