கடையம்- புகையிலை விற்ற பெண் கைது
1 min read
Woman arrested for selling tobacco at shop
23.2.2026
தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த சங்கராலிங்கபுரத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 36). இவர் இப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவது குறித்து கடையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாடசாமி இதுகுறித்து ரகசியமாக விசாரித்து தகவலை உறுதி செய்து அதிரடியாக கிருஷ்ணம்மாளை கைது செய்து வழக்கு பதிவு செய்தார்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணம்மாளிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 18 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணம்மாள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் கொக்கிரகுளம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.