June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கோவில் விழாவில் வெள்ளிக்கிழமை பரதநாட்டியம்

1 min read

Bharatanatyam on Friday at the Tenkasi temple festival

24.2.2026
தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் மாசி மகம் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இதில் 7 ஆம் திருநாள் மண்டகப்படி தென்காசி வட்டார தேவர் சமுதாயம் சார்பில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்காசி ஸ்ரீ உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் மாசி மகத் பெருந்திருவிழா வில் தென்காசி வட்டார தேவர் சமுதாயம் சார்பில் 7 ஆம் திருநாள் மண்டகப்படி வரும் 27.02.2026 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.

அதன்படி அன்று காலை 9 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை நிகழ்ச்சியும், பிற்பகல் 12:00 மணி அளவில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தென்காசி வரதாலயா கல்சுரல் அகாடமி வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஆன்மீக இன்னிசை நிகழ்ச்சியும், இரவு எட்டு மணிக்கு ஸ்ரீ நடராஜர் தாண்டவ பெருமாள் எழுந்தருளல் தாண்டவ தீபாராதனை நிகழ்ச்சியும் – பஞ்சமூர்த்தி புறப்பாடு, புஷ்ப பல்லக்கு சுவாமி அம்பாள் வீதி உலாவருதல், அதனைத் தொடர்ந்து சிறப்பு பூ அலங்காரம் மற்றும் வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.

தென்காசி ஸ்ரீ உலகம்மன் உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் மாசி மகப்பெரும் திருவிழாவில் தென்காசி வட்டார தேவர் சமுதாயம் சார்பில் நடைபெற உள்ள 7ஆம் திருநாள் நிகழ்ச்சியில் தென்காசி வட்டார தேவர் சமுதாய மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமி அம்பாள் அருள் பெறுவதோடு, திருவிழாவினை சிறப்பித்து தருமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை தென்காசி வட்டார தேவர் சமுதாய நிர்வாகிகள்
எம்.ராஜ்குமார், ஜி.சோமசுந்தரம்,
பி .கோபால் ராம், எஸ்.கருப்பசாமி, எம்.சுப்பிரமணியன், ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *