June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட‌த்தில் தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம்

1 min read

Constituency wise voters details in Tenkasi district

24.2.2026
தென்காசி மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2026 இறுதி வாக்காளர் பட்டியலை தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், வெளியிட்டார்கள்.

தென்காசி மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் த ஏ.கே.கமல்கிஷோர். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் – 2026 இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன் பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:-

தென்காசி மாவட்டம், 01.01.2026 ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம். 2026 நடைபெற்று 19.12.2025ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 30.012026 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றம் மாறுதல் தொடர்பாக தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளில் படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

அதன்படி படிவம் 6 பெறப்பட்டவை 43705 அதில் ஏற்கப்பட்டவை 43267
படிவம் 7 பெறப்பட்டவை 647 அதில் ஏற்கப்பட்டவை 612
படிவம் 8 (திருத்தம்) பெறப்பட்டவை 12315 அதில் ஏற்கப்பட்டவை 12,266
படிவம் 8 இடம் பெயர்தல் பெறப்பட்டவை 11676 அதில் ஏற்கப்பட்டவை 10989
வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் களஆய்வு பரிந்துரையின்படி வாக்காளர் பதிவு அலுவலர்களால் இறுதிசெய்யப்பட்டு, 1,680 வாக்குச்சாவடிகளைக் கொண்ட இறுதி வாக்காளர்பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி தென்காசி மாவட்டம் 219.சங்கரன் கோவில் (தனி) வாக்குச்சாவடி எண்ணிக்கை 315, ஆண் வாக்காளர்கள்
1,14,876 பெண் வாக்காளர்கள் 1,21,639 மூன்றாம் பாலினத்தவர் 17 மொத்தம்
2,36,532, வாக்காளர்களும்

  1. வாசுதேவநல்லூர் (தனி)
    வாக்குச்சாவடி எண்ணிக்கை 310 ஆம் வாக்காளர்கள் 1,10960 பெண் வாக்காளர்கள் 1,16,396 மூன்றாம் பாலினத்தவர் 13 மொத்த வாக்காளர்கள் 2,37,369 வாக்காளர்களும்,
  2. கடையநல்லூர் வாக்குச்சாவடி எண்ணிக்கை 364 ஆண்பாக்காளர்கள் 1,32,
    228, பெண் வாக்காளர்கள்
    1,35,272 மூன்றாம் பாலினத்தவர்கள் 17 மொத்த வாக்காளர்கள் 2,67,517, வாக்காளர்களும்,
  3. தென்காசி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி எண்ணிக்கை 359 ஆண் வாக்காளர்கள் 1,36,260, பெண் வக்காளர்கள் 1,43,223,
    மூன்றாம் பாலினத்தவர் 102 மொத்த வாக்காளர்கள் 2,79, 585, வாக்காளர்களும்,
  4. ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி எண்ணிக்கை 332 ஆண்பாக்காளர்கள் 1,23,739, பெண் வாக்காளர்கள் 1,29,650, 3 ஆம் பாலினத்தவர்கள் 19 மொத்த வாக்காளர்கள் 2,53,408 வாக்காளர்களும் உள்ளனர்.

அதன்படி தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளது இதில் மொத்த ஆண் வாக்காளர்கள் 6,18,063 பெண் வாக்காளர்கள் 6,46,180 மூன்றாம் பாலினத்தவர்கள் 168 வாக்காளர்கள் உள்ளனர்.
5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,64,411 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 6,18,063 ஆண் வாக்காளர்கள். 6,46,180 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 168 என மொத்தமாக 12,64,411 வாக்காளர்கள் உள்ளனர்.

19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட தற்போது வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் புதியதாக 41,222 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் ஆண் வாக்காளர்களை விட 28,117 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக 222 தென்காசி சட்டமன்றத் தொகுதியும் (2,79,585), குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக 220 வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியும் (2,27,369) உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயசந்திரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சண்முகம், சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *