திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்டசுவாமிக்கு நினைவு இல்லம்
1 min read
Memorial house for Ayya Vaikundaswamy in Thiruvananthapuram
25.2.2026
கேரளம் மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் 28.02.2026 அன்று ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி ஸ்ரீமன் நாராயணசாமிக்கு நினைவு இல்லம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட இருக்கும் கேரளம் முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் சமூக நீதிக்காக போராடியவர் ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி 1809 ஆம் ஆண்டு சுவாமி தோப்பில் பொண்ணு நாடார் வெயிலாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். அனைவராலும் முத்துக்குட்டி என்று அன்பாக அழைக்கப்பட்டவர். பிற்காலத்தில் முத்துக்குட்டி சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
அன்னதானம் தர்மம் மூலம் அனைவரும் ஒன்றாக உண்ணும் முறையை ஏற்படுத்தியவர் முந்திரி கிணறு மூலம் அனைத்து சமுதாய மக்களும் ஒரே கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு உரிமை பெற்றுக் கொடுத்தவர் 18 ஜாதி பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்றும் ஆண்கள் காலனி அணிய கூடாது என்றும் சட்டம் கொண்டு வந்த திருவிதாங்கூர் மன்னரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு தலைப்பாகை அணிய கற்றுக் கொடுத்த வீரத்துறவி அய்யா வைகுண்ட சுவாமி அகிலத்திரட்டு வேத நூல் அய்யா வைகுண்டரை ஸ்ரீ பண்டாரம் என்றும் ஆண்டவன் என்றும் மாயோன் என்றும் நாராயணர் என்றும் சூரிய நாராயணர் என்றும் வைகுண்ட சுவாமி என்றும் பல பெயர்களில் பெருமையோடு அழைக்கிறார்கள்.
அதேபோல ஐயாவின் பக்தர்கள் ஸ்ரீமன் நாராயண சுவாமி என்றும் ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி என்றும் அன்போடும் பெருமையோடும் அழைக்கின்றார்கள். வீரத் துறவியான அய்யா வைகுண்ட சுவாமிக்கு திருவனந்தபுரத்தில் கேரளம் அரசின் சார்பில் நினைவு இல்லம் அமைக்கும் கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் நன்றிகளை தெரிவித்துள்ளார்