June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம்- ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் செய்ய முடிவு

1 min read

Keelappavur Town Panchayat – Decision to carry out project works at an estimated cost of Rs. 81 lakh

25.2.2026

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் 25.02.2026 – அன்று முற்பகல் 11.00 மணியளவில் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமையிலும், செயல்அலுவலர் ஜா.மாணிக்கராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வி.ராதா விநாயகப்பெருமாள், செ.கோடீஸ்வரன், மு.மாலதி முருகேசன், மு கு.ஜெயசித்ரா குத்தாலிங்கம்,.கனகபொன்சேகா முருகன், க.இசக்கிராஜ், சி.அன்பழகு சின்னராஜா, ஜா.ஜேஸ்மின் யோவான், மா.இசக்கிமுத்து, சு.பவானி இலக்குமணத்தங்கம், தா.தேவஅன்பு, ஜெ.முத்துசெல்விஜெகதீசன், த.வெண்ணிலாதங்கச்சாமி, ம.சாமுவேல்துரைராஜ், சீ.பொன்செல்வன் மற்றும் பேரூராட்சி அனைத்து அலுவலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் மேற்படி மன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றிருக்கும் 18-வது வார்டு மன்ற உறுப்பினர் சீ.பொன்செல்வனுக்கு பேரூராட்சி மன்ற அனைத்து உறுப்பினர்களின் சார்பாக பேரூராட்சி மன்றத்தலைவர் அவர்களால் அன்னாரது பணி சிறக்க வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கீழப்பாவூர் பேரூராட்சி பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் திட்டம், பொதுசுகாதார பராமரிப்பு, தெருவிளக்கு அமைத்தல், சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் போன்ற அத்தியாவசிய பணிகள் ரூ.81.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள வைக்கப்பட்டுள்ள 29 பொருள்குறிப்புகளும் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு உறுப்பினர்களின் முழு ஆதரவோடு தீர்மானங்களாக ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. கூட்ட முடிவில் பேரூராட்சி பணியாளர் இரா.தர்மராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *