கடையம் மேற்கு ஒன்றியத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை
1 min read
Tamil women’s campaign wins in Kadayam West Union
25.2.2026
தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் மகளிரணியினர் பரப்புரை மேற்கொண்டனர்.
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் வெல்லும் தமிழ் பெண்கள் எனும் தலைப்பில் திமுக மகளிரணியினர் வீடுவீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை பரப்புரை செய்து வருகின்றனர்.
இதன்படி, நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா.ஆவுடையப்பன் அறிவுறுத்தலின் பேரில் கடையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கடையம், மந்தியூர், அழகப்பபுரம், சிவசைலம் ஆகிய பகுதிகளில் (பாகம் எண் 221, 222, 227, 242, 244) திமுக மகளிரணியினர் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை மேற்கொண்டனர்.
கடையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமையில் திமுகவின் மகளிரணியினர் வீடுவீடாக சென்று பெண்களிடம் திமுக அரசின் நலத் திட்டங்களையும் சாதனைகளையும் பட்டியலிட்டு பரப்புரை செய்தனர்.
திமுக மகளிரணி நிர்வாகிகள் வளர்மதி, அந்தோணி, சோபியா, பிரியா, மேனகா, நூருல் அமீர் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்ட ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.