மானூர் அருகே மாமியார் வெட்டிக் கொலை மருமகள் கைது
1 min read
Daughter-in-law arrested for stabbing mother-in-law to death near Nellai
27.2.2026
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளன்குளத்தில் மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், மானூர் அருகே கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவில் வசித்து வந்தவர் வெள்ளையம்மாள் (வயது 90), இவரது கணவர் அருணாசலம் மற்றும் மகன் பழனி ஆகி யோர் இறந்து விட்டனர். இதனால் வெள்ளையம்மாள் தனது மருமகள் வசந்தா (வயது 60) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வெள்ளையம்மாள் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்,
அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரது மருமகள் வசந்தாவை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கைதான வசந்தாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “வெள்ளையம்மாள் வயது முதிர்வால் எப்போதும் சம்பந்தமே இல்லாமல்
மருமகளை திட்டி வந்துள்ளார். வேலைக்கு சென்று வரவோ, சுபநிகழ்ச்சிக ளில் கலந்து கொண்டு திரும்பவோ சற்று தாமதமானாலும் சந்தேகப்படுவாராம். இதனால் இருவருக்கும் இடையே அடிக் கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்றும் மாமியார் திட் டியதால் ஆத்திரம் அடைந்த அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வசந்தாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவு படி அவரை கொக்கிரகுளம் மகளிர் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.