நெல்லை கல்லூரி மாணவியை கடத்தி பாலியல்; டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறை
1 min read
Nellai College student kidnapped and raped; driver gets 25 years in prison
27/2/2026
தென்காசி மாவட்டம்
முக்கூடல் பகுதியில் கல்லூரி மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டிரைவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் 17 வயது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரிடம் ஆலங்குளம் அருகே உள்ள ஓடைமறிச்சான், அரியபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த சுமேஷ் (வயது 33) என்பவர் அறிமுகமானார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்திலையில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 2021ம் நவம்பர் 16 ம் தேதி மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து மாணவியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தார். மீண்டும் 2022ம் ஆண்டு பிப்., 15ம் தேதியும் மாணவியிடம் சுமேஷ் அத்துமீறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு மே 20ம் தேதி ஒரு பேருந்து நிலையத்தில் மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுமேஷ், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பைக்கில் கடத்திச் சென்றார்.
இது குறித்து சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சுமேஷை கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை நெல்லை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி ராமலிங்கம் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றவாளி சுமேஷுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 15, ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரபா ஆஜராகி வாதாடினார்.