ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மருத்துவமனையில் இரத்ததான முகாம்
1 min read
Blood donation camp at Sri Paramakalyan Hospital in Alwarkurichi
28.2.2026
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
ஸ்ரீ பரமகல்யாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துலெட்சுமி என்ற சசிகலா தலைமையில் கல்லூரியின் நெறியாளர் முனைவர் கணபதி சங்கரகிருஷ்ணன் முன்னிலையில் கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவர் மருத்துவர் பழனிக்குமார் மேற்பார்வையில் கல்லூரி மாணவ மாணவியர் இரத்த தானம் அளித்தனர்.
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் தனலெட்சுமி,
ஆங்கில துறை பேராசிரியர் அனுஷியா, என்எஸ்எஸ் அலகு 19 முனைவர் ரமேஷ், என்எஸ்எஸ் அலகு 18 முனைவர் சண்முக பிரியா, என்எஸ்எஸ் அலகு 177 சுப்புலெட்சுமி, என்எஸ்எஸ் அலகு 178 அருள்ராஜ், என்எஸ்எஸ் அலகு 120 நம்பி ராஜன், செஞ்சிலுவை சங்கம் முனைவர் செந்தில் முருகன், முனைவர் சுப்பிரமணியன் ஐசிடிசி ஆலோசகர் பிரியா, கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 50பேர் இரத்த தானம் அளித்தனர்.
தென்காசி அரசு மருத்துவமனை
இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மருத்துவர் பாபு மற்றும் மருத்துவ குழுவினர் மாணவ மாணவியர் களிடமிருந்து இரத்தம் சேகரித்தனர்.