August 24, 2026

Seithi Saral

Tamil News Channel

மம்தா பானர்ஜி தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கம்

1 min read

47,111 voters removed from Mamata Banerjee constituency

1.3.2026
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இறுதி பட்டியலில் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் 7.04 கோடியாகக் குறைந்துள்ளது.

இந்த SIR நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார்.

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் தானே ஆஜராகி வாதாடினார்.

தேர்தல் ஆணையம், மேற்கு வங்க அரசு இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கை இன்மை ஒரு அரிய சூழல் என்று சுட்டிக்காட்டி SIR பட்டியல் சரிபார்ப்புக்கு மாவட்ட நீதிபதிகளை நியமிக்க மேற்கு வங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே நீதிபதிகள், ‘மறுஆய்வு’ பட்டியலில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.

இந்த சரிபார்ப்புக்கு பின்னர் கூடுதலாக 8 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இப்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் சுமார் 11,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எனவே இந்த பாரிய வித்தியாசம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் இறுதி வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாக்குகளும், கொல்கத்தா தெற்கில், 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் வரையும் நீக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *