பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
1 min read
Chief Minister Stalin congratulates the students who write the public examination
1.3.2026
நாளை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர் வரும் 11ம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது. ஆல் தி பெஸ்ட். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.