ராஜஸ்தானில் 170 ஏக்கர் அபின் தோட்டத்தை அழித்த அதிகாரிகள்
1 min read
Rajasthan: Authorities destroy 170 acres of opium plantation worth Rs 275 crore
3.3.2026
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதியில் 170 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட அபின் தோட்டத்தை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அபின் தோட்டத்தை அதிகாரிகள் அழித்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.275 கோடி என்று கூறப்படுகிறது.
அபின் காய்களில் இருந்து பெறப்படும் பாலானது வலி நிவாரணி, போதை மருந்துகளின் மூலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.