திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது; 28 தொகுதி ஒதுக்கீடு
1 min read
DMK-Congress alliance confirmed; 28 seats allocated
4.3.2026
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திமுக – காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. நாளை மாநிலங்களவைக்கு முதலமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.