செங்கோட்டையில் ரூ.1.20 கோடி செலவில் நகர் நல வாழ்வு மையம் திறப்பு விழா
1 min read
Inauguration ceremony of Urban Wellness Center at a cost of Rs. 1.20 crore in Sengottai
4.3.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் தமிழ்நாட முதலமைச்சர், 15 வது நிதிகுழுவின் மூலம் செங்கோட்டை பகுதியில் 1.20 கோடி, மதிப்பீட்டில் செங்கோட்டை நகர் நல வாழ்வு மையம் புதிய கட்டிடம் கட்டப்பட்டு நேற்று தமிழ்நாடு முதலமைச்சா் முக.ஸ்டாலின் காணோளி காட்சி மூலம் திறக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக செங்கோட்டையில் செங்கோட்டை நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் எஸ்எம்.ரஹீம், தலைமையில் புதிய கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ்
நகர்மன்ற உறுப்பினா்கள் பேபி ரஸம் பாத்திமா, இசக்கிதுரை பாண்டியன், முருகையா நியமன உறுப்பினா் நவாஸ் பூட்டோ, ,மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வி செங்கோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவகாமி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ் மற்றும் செவிலியா்கள் நகராட்சி பணியாளா்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் குற்றாலிங்கம், குட்டிராஜா, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் ஆதிமூலம் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.